Friday, January 9, 2015

சென்னை, ஜன. 9–சென்னை ஐகோர்ட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை 15 முதல் 20 சதவீத உயர்த்தி கடந்த டிசம்பர் 12–ந்தேதி உத்தர விட்டுள்ளது. தமிழ் நாடு மின்சாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் 100 சதவீத மின் உற்பத்தி செய்யப்பட்டால், இந்த மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவையே ஏற்படாது.தற்போது அந்த மின் உற்பத்தி நிலையங்களில், சரிவர உற்பத்தி நடைபெறாமல், பல அலகுகள் (யுனிட்டுகள்) மூடப்பட்டுள்ளது. இதனால், தனியார் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக விலைக்கு தமிழக மின்சார வாரியம் கொள்முதல் செய்கிறது. அதாவது, மொத்த மின்சார பயன்பாட்டில், 30 சதவீதம் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் இருந்துதான் வாங்கப்படுகிறது.இதனால், மின்சார வாரியத்துக்கு நிதி சுமை ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் நிதி சுமையை பொதுமக்கள் தலைமையில் மின்சாரத்துறை வைக்கிறது. எனவே, அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் முழு உற்பத்தி திறனை பெறவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இதுபோன்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது என்று நினைக்கின்றோம். எனவே, இது போன்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதா? என்பதை ஆராய்ந்து விட்டு, எங்களுக்கு தகவல் சொல்லுங்கள் என்று மனுதாரர் தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற 11–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

.

No comments: