புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் ஆணைக்கிணங்க பேரவை செயலாளர் M. செளந்தரபாண்டியன் அவர்கள் ஆலோசனைப் படி, காஞ்சிபுரத்தில் தமிழ் நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளா் சங்கம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் K. P. சாமிநாதன் மத்திய சங்க தலைவர் தலைமையிலும், சிவசந்திரமோகன் மத்திய சங்க செயலாளர் முன்னிலையிலும், சா்தர் மத்திய சங்க துணை தலைவர் வரவேர்ப்புரையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேரவை துணை செயளாலா் பி. வேணுராம், மத்திய சங்க நிர்வாகிகள் மாவட்ட திட்ட நிர்வாகிகள் மற்றும் காஞ்சிபுரம் நகர கழக செயலாளர் நித்தியநாதன் மற்றும் மின் வாரிய தொழிலாளா்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
Monday, January 11, 2016
நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளா் சங்கம் செயற்குழு கூட்டம்
புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் ஆணைக்கிணங்க பேரவை செயலாளர் M. செளந்தரபாண்டியன் அவர்கள் ஆலோசனைப் படி, காஞ்சிபுரத்தில் தமிழ் நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளா் சங்கம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் K. P. சாமிநாதன் மத்திய சங்க தலைவர் தலைமையிலும், சிவசந்திரமோகன் மத்திய சங்க செயலாளர் முன்னிலையிலும், சா்தர் மத்திய சங்க துணை தலைவர் வரவேர்ப்புரையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேரவை துணை செயளாலா் பி. வேணுராம், மத்திய சங்க நிர்வாகிகள் மாவட்ட திட்ட நிர்வாகிகள் மற்றும் காஞ்சிபுரம் நகர கழக செயலாளர் நித்தியநாதன் மற்றும் மின் வாரிய தொழிலாளா்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
Sanction of Pongal Prize 2016 for pensioners,family
Sanction of Pongal Prize 2016 for pensioners,family pensioners and ex-gratia beneficiares orders issued vide (Per) CMD TANGEDCO (SB) Pro. No.4/11.01.16 payment on 12.01.16
மின்வாரிய பொறியாளர் தேர்வுக்கு தடை கோரி, அப்ரண்டீஸ் முடித்தவர்கள் வழக்கு....
மின்வாரிய பொறியாளர் தேர்வுக்கு தடை கோரி, அப்ரண்டீஸ் முடித்தவர்கள் வழக்கு போட்டுள்ளதால், 30ம் தேதி தேர்வு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில், 375 உதவி பொறியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வரும், 30 ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கு தடை விதிக்க கோரி அப்ரண்டீஸ் முடித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் அருள்செல்வன் கூறியதாவது: பி.இ., முடித்து மின்வாரியத்தில் ஓராண்டு அப்ரண்டீஸ் (தொழில் பழகுனர்) பயிற்சி முடித்தவர்களை பணியில் சேர்ப்பது தொடர்பாக, கொள்கை அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என மின்வாரிய விதியில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி இதுவரை உதவி பொறியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது, மின்வாரியத்தில் ஓராண்டு அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தாமல், நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். தற்போது மின்வாரியத்தில், 375 உதவி பொறியாளர் பணியிடத்துக்கு அப்ரண்டீஸ் முடித்தவர்கள் உள்பட அனைவருமே எழுத்து தேர்வில் பங்கேற்க வேண்டியுள்ளது. அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு எந்தவித முன்னுரிமை வழங்கப்படும் என்பதையும் அறிவிக்கவில்லை. அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்த கூடாது அல்லது அவர்களுக்கு எந்தவித முன்னுரிமை அளிப்பது என்பதை வாரியம் தெளிவுபடுத்தி விட்டு, எழுத்து தேர்வை நடத்த வேண்டும். அதுவரை தேர்வு நடத்த இடைக்கால தடை விதிக்க கோரி, பி.இ., முடித்து மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த, 51 பேர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று (ஜன.11) விசாரணைக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதனால், வரும் 30ம் தேதி மின்வாரியத்துக்கு, 375 உதவி பொறியாளர் தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு விண்ணப்பத்தாரர்களிடம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)


