Sunday, November 27, 2016

திருப்பூரில் TNEB DMTS ஆலோசனை கூட்டம்





திருப்பூரில்  மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம் மாநில தலைவர் திரு.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில்  சிறப்பு ஆலேசனை கூட்டம்
 நடைபெற்றது  இதில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்ற அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும் அதுவரை மின்வாரியத்தில் எந்த பணிநியமன ஆணையும் வழங்க கூடாது என்று நீதிமன்றத்தில் தடைஉத்தரவு அனை உடனடியாக வாங்கப்படும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது

தூத்துக்குடி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிக்கை





பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு

பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு பற்றி கேப்டன் அறிவிப்பு

Work load sub committe

Saturday, November 26, 2016

மின் கட்டணம் செலுத்தாத, அரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கணக்கில், மின் கட்டணம் செலுத்தா மல், அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், 820 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதால், இந்த அதிரடி நடவடிக் கையை, தமிழக மின் வாரியம் எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் பற்றிய விபரத்தை, டிச.,3க்குள் அளிக்கும் படியும், மின் வாரிய அதிகாரிகளுக்கு கிடுக்கிப் பிடி போடப்பட்டுள்ளது.

அரசு துறை அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகம் மற்றும் கட்டடங்களு க்கு, மின் வாரியம் சார்பில், மின் வினியோகம் செய்யப்படுகிறது.பொது மக்கள் மற்றும் தனி யார் நிறுவனங்கள், கடைகளில், மின் பயன்பாடு கணக்கெடுத்த, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும்.பின்,அபராதத்துடன்கட்டணம் செலுத் திய பிறகே, இணைப்பு வழங்கப்படுகிறது.

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மின் கணக்கு எடுத்ததில் இருந்து, அபராதமின்றி கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசம் தரப்பட்டும், கட்டணம் செலுத்துவதில்லை.

தற்போது, மின் வாரி யம், பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.அதற்கு, அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்பு கள், பல மாதங்களாக, மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளதும், ஒரு காரணம்.

நிதி நெருக்கடி அதிகரித்து வருவதால், மின் கட்டணத்தை செலுத்துமாறு, மின் வாரிய அதி காரிகள், அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்பு களுக்கு, பல முறை கடிதம் எழுதினர். ஆனால், அவை பொருட்படுத்துவதில்லை.

இதையடுத்து, பாக்கியை வசூலிக்கவும், ஒழுங் காக கட்டணம் செலுத்த வைக்கவும், அதிரடி நடவடிக்கையில் இறங்க, மின் வாரியம் முன் வந்துள்ளது. நிலுவை வைத்துள்ள உள்ளாட்சி மற்றும் அரசு துறை அலுவலகங் களில், மின் இணைப்பை துண்டிக்குமாறு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

அரசு துறை,உள்ளாட்சி அதிகாரிகளை சந்தித்து,நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை வசூலிக்க, பொறியாளர்கள் செல்வர்; அங்கே யாரும் கண்டுகொள்வதில்லை. பல மணி நேரம் காக்க வைத்து, அனுப்பி விடுவர்.

தற்போது, கட்டணம் செலுத்தாத, அரசு அலுவலகங்களுக்கு முறைப்படி, 'நோட்டீஸ்' அளித்து, மின் இணைப்பை துண்டிக்குமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எனவே, கட்டணம் செலுத்தாமல் அலட்சிய மாக உள்ள அரசு அலுவலகம், உள்ளாட்சி கட்டடங்கள், விரைவில் இருளில் மூழ்கும். இந்த உத்தரவு தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை, பொறியாளர்கள், டிச., 3க்குள், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
மதிப்பெண் குறைவு!

மத்திய அரசு, மாநில மின் வாரியங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஆண்டு தோறும் மதிப்பெண் வழங்குகிறது.


கடந்த ஆண்டு, தமிழக மின் வாரிய செயல்பாடு மோச மாக இருப்பதாக, மத்திய அரசு தெரிவித் தது. இதற்கு, அரசு துறைகளிடம் இருந்து, முறை யாக மின் கட்டணம் வசூலிக்காததும் முக்கிய காரணம்.
சிறப்பு  ஆலேசனை  கூட்டம்

27-11-2016 ஞாயிற்றுக்கிழமை

தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் மத்திய சங்கத்தில்  இணைந்துள்ள திருப்பூர் மின்பகிர்மான வட்ட தேசிய முற்போக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு ஆலேசனை கூட்டம் வருகிற 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில்  திருப்பூர் பழைய பஸ்நிலையம்  உஷா தியேட்டர் 4 ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது  அதனால்  அனைத்து நிர்வாகிகளும் பொருப்பாளர்களும் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது
தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம் திருப்பூர் மாவட்டம்

Tuesday, November 22, 2016

47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எண்ணூர் அனல் மின்நிலையம் மூடல்

47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எண்ணூர் அனல் மின்நிலையம் மூடல் !!
சென்னை: 47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய அனல் மின் நிலையங்களில், சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையம் முக்கியமான ஒன்றாகும். இந்த அனல் மின்நிலையம் 1970 ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அனல் மின்நிலையத்தை, தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம் நிர்வகித்து வருகின்றது.
தற்போது அனல் நிலையத்தில், 1,070 நிரந்தர தொழிலாளர்கள், சுமார் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இங்குள்ள 5 அலகுகள் மூலம் சுமார் 450 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது.

பழைய அலகுகள் அருகிலேயே, 660 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் ரூ.3.960 கோடி மதிப்பீட்டில் புதிய அனல் மின் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த கட்டுமானப் பணிகளை லான்கோ என்ற நிறுவனம் செய்து வருகின்றது. எண்ணூர் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால், மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, எண்ணணூர் அனல் மின் நிலையத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூடுவதற்கு தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகம் (TANGEDCO)முடிவெடுத்துள்ளது. அதன்படி அனல் மின்நிலையத்தில் உள்ள 5 அலகுகளில், ஐந்தாவது அலகு ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. மீதமுள்ள நான்கு அலகுகளையும் மூடுவதற்கான முடிவை மின்னுற்பத்திக் கழகம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியோடு மின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அனல் மின் நிலையத்தின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இங்கு பணியில் உள்ள ஊழியர்கள், பொறியாளர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது