Sunday, January 18, 2015

சென்னை, ஜன. 18–தற்போது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்சார மீட்டர்களில் ரீடிங் எடுத்த நாளில் இருந்து 20 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.அதன்பிறகு மின் கட்டணத்தை செலுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அவர்கள் அபராத தொகையுடன் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15–ந்தேதி முதல் இன்று (18–ந்தேதி) வரை தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மின் கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்படும் பொது மக்களின் வசதிக்காக கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த 15–ந்தேதி முதல் இன்றுவரை மின் கட்டணம் செலுத்துவதற்கான 20 நாட்கள் அவகாசம் முடிந்தவர்கள் நாளை (19–ந்தேதி)யும், 20–ந்தேதியும் எந்தவித அபராதமும் இன்றி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Thursday, January 8, 2015

லஞ்ச, ஊழல் புகாரைப் பெற என்.எல்.சி.யில் வாட்ஸ் அப் தகவல் திட்டம்: மின் வாரியத்திலும் அமல்படுத்த யோசனை
 ஹலோ ஈ.பி ஆபிசுங்களா கரண்ட் எப்ப சார் வரும்? என்று இனி போன் போட்டு கேட் வேண்டாம். ஏனெனில் மின்தடை ஏற்படும் நேரம் குறித்து இனிமேல் எஸ்எம்எஸ் அனுப்ப தமிழக மின் விநியோகத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம் மின்சாரவாரியம் சார்பில் மின்கட்டணம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக அறிவிக்கப்பட்ட மின்தடை, திடீர் என்று ஏற்படும் மின்தடை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட உள்ளது.

இதுகுறித்து மின் விநியோகத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் மேம்பாடு சீரமைப்பு திட்டத்தின் கீழ்

தமிழ்நாட்டில் உள்ள 110 நகரங்களில் மின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

Tuesday, January 6, 2015

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடிய அரசுப் பணி விதி செல்லாது

Monday, January 5, 2015

புதிய மின் கட்டணத்தை கண்டித்து, வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது' என, விசைத்தறியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Friday, January 2, 2015

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், கேரளா வழக்கு தொடர்ந்துள்ளதால், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.



எதிர்கால தேவை: தமிழ்நாடு மின் வாரியம், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தனியார் நிறுவனங்களுடன், 2013 அக்., மாதம் ஒப்பந்தம் செய்தது. இதில், 2,158 மெகாவாட் மின்சாரம், சத்தீஸ்கர், ஒடிசா மாநில, தனியார் மின் நிலையங்களில் இருந்து வாங்கப்பட இருக்கிறது. ஒப்பந்தம் செய்த, 3,330 மெகாவாட் மின்சாரத்தில், கடந்த பிப்., மாதம், 1,000 மெகாவாட் வாங்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஒ.பி.ஜி., நிறுவனத்திடம் இருந்து, 74 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வாங்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், கடந்த ஆக., மாதம், ஜிண்டால் நிறுவனம், 150; கடந்த டிச., மாதம், கோஸ்டல் எனர்ஜி, 558 என, மொத்தம், 782 மெகாவாட் மின்சாரம் மட்
டுமே கிடைக்கிக்ஷ்றது.
வட மாநிலங்களில் இருந்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களுக்கு, மின்சாரம் கொண்டு வர, மகாராஷ்டிரா - சோலாப்பூர்; கர்நாடகம் - ராய்ச்சூர் இடையில், 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட, மின் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில், மின்சாரம் கொண்டு வருவதில், முன்னுரிமை கேட்டு, கேரள அரசு, மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சோலாப்பூர் - ராய்ச்சூர் மின் வழித்தடத்தில், 5,000 மெகாவாட் மின்சாரம் கொண்டு வர முடியும். இந்த வழித்தடத்தில், தமிழகத்திற்கு நீண்ட காலம், அதாவது, 15 ஆண்டுகளுக்கு, மின்சாரம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அந்த வழித்தடத்தில், 500 - 750 மெகாவாட் என்ற குறைந்த
மின்சாரம் கொண்டு வரப்படும் நிலையில், குறுகிய கால ஒப்பந்தம் செய்துள்ள தனியார் மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது.


முயற்சி: கேரளா தொடர்ந்த வழக்கால், சோலாப்பூர் - ராய்ச்சூர் வழித்தடத்தில், எந்த மாநிலத்திற்கு, எவ்வளவு மின்சாரம் என்று, நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பின், யாருக்கு எவ்வளவு மின்சாரம் என தெரிய வரும். இருப்பினும், தமிழகத்திற்கு, 1,000 மெகாவாட் மின்சாரம் கொண்டு வர முயற்சிப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.




யாரிடம் எவ்வளவு? இந்து பாரத் - 500; மகாநதி - 500; ஐ.எப்.எல்.எஸ்., - 540; கோஸ்டல் எனர்ஜி - 558; ஜிண்டால் - 400; டி.பி.பவர்., - 208; பால்கோ - 200; பாரிவேல் - 100; அதுனிக் - 100; ஜி.எம்.ஆர்., - 150; ஒ.பி.ஜி., - 74 என, 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.