மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், கேரளா வழக்கு தொடர்ந்துள்ளதால், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
எதிர்கால தேவை: தமிழ்நாடு மின் வாரியம், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தனியார் நிறுவனங்களுடன், 2013 அக்., மாதம் ஒப்பந்தம் செய்தது. இதில், 2,158 மெகாவாட் மின்சாரம், சத்தீஸ்கர், ஒடிசா மாநில, தனியார் மின் நிலையங்களில் இருந்து வாங்கப்பட இருக்கிறது. ஒப்பந்தம் செய்த, 3,330 மெகாவாட் மின்சாரத்தில், கடந்த பிப்., மாதம், 1,000 மெகாவாட் வாங்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஒ.பி.ஜி., நிறுவனத்திடம் இருந்து, 74 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வாங்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், கடந்த ஆக., மாதம், ஜிண்டால் நிறுவனம், 150; கடந்த டிச., மாதம், கோஸ்டல் எனர்ஜி, 558 என, மொத்தம், 782 மெகாவாட் மின்சாரம் மட்
டுமே கிடைக்கிக்ஷ்றது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சோலாப்பூர் - ராய்ச்சூர் மின் வழித்தடத்தில், 5,000 மெகாவாட் மின்சாரம் கொண்டு வர முடியும். இந்த வழித்தடத்தில், தமிழகத்திற்கு நீண்ட காலம், அதாவது, 15 ஆண்டுகளுக்கு, மின்சாரம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அந்த வழித்தடத்தில், 500 - 750 மெகாவாட் என்ற குறைந்த
முயற்சி: கேரளா தொடர்ந்த வழக்கால், சோலாப்பூர் - ராய்ச்சூர் வழித்தடத்தில், எந்த மாநிலத்திற்கு, எவ்வளவு மின்சாரம் என்று, நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பின், யாருக்கு எவ்வளவு மின்சாரம் என தெரிய வரும். இருப்பினும், தமிழகத்திற்கு, 1,000 மெகாவாட் மின்சாரம் கொண்டு வர முயற்சிப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.
யாரிடம் எவ்வளவு? இந்து பாரத் - 500; மகாநதி - 500; ஐ.எப்.எல்.எஸ்., - 540; கோஸ்டல் எனர்ஜி - 558; ஜிண்டால் - 400; டி.பி.பவர்., - 208; பால்கோ - 200; பாரிவேல் - 100; அதுனிக் - 100; ஜி.எம்.ஆர்., - 150; ஒ.பி.ஜி., - 74 என, 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

No comments:
Post a Comment