புதிய மின் கட்டணத்தை கண்டித்து, வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது' என, விசைத்தறியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நிர்பந்தம்:கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், கோம்பக்காட்டில் நடந்தது.இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணத்தை ரத்து செய்யும் வரை, ஐந்து மாவட்ட கூட்டு குழு கூட்டத்தின் முடிவின் படி, மின் கட்டணத்தை செலுத்துவதில்லை.அரசு மானியம் அறிவித்த பின்னும், புதிய மின் கட்டணத்தின் அடிப்படையில், மின் வாரியம் கணக்கீடு செய்து, அந்த தொகையை கட்ட நிர்ப்பந்திக்கிறது.இதை கண்டித்து, வரும், 7ம் தேதி முதல், விசைத்தறிகளை நிறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும்.
நடவடிக்கை:உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துக்கான மானியத்தை, மின் வாரியத்துக்கு செலுத்தி, தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும், ஒரு லட்சம் தறிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழக அரசு, கடும் நெருக்கடிக்கு ஆளானது.இந்நிலையில், விசைத்தறிகள், 'ஸ்டிரைக்' அறிவிப்பு, அரசுக்கு, அடுத்த சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment