Wednesday, December 31, 2014
Sunday, December 28, 2014
குடும்பத் தகராறை காரணம் காட்டி பதவி உயர்வை நிறுத்தக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம்
குடும்பத் தகராறைக் காரணம் காட்டி பதவி உயர்வை நிறுத்தக் கூடாது என்று மின்வாரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணியாற்றுபவர் ஏ.வேலுச்சாமி. இவருக்கு மனைவியுடன் குடும்பத் தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் விவாகரத்து கோரி, திருச்சி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வேலுச்சாமி மனுதாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்களது திருமணம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வருவதற்கு முன்பே வேலுச்சாமி வேறொரு பெண்ணை திருமணம் செய்திருப்பதாக ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டிடம் அவர் மனைவி தனிப்பட்ட புகார் கொடுத்தார். இதன் காரணமாக 2014-15-ம் ஆண்டுக்கான உட்தணிக்கை அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் வேலுச்சாமி பெயர் இடம்பெறவில்லை. மனைவியின் தனிப்பட்ட புகாரால் அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார். பின்னர் பணி இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அவர் பணியில் சேர்ந்தார்.
அதன் பிறகு, அவருக்கு ஆண்டு சம்பள உயர்வும் தரப்படவில்லை. இச்சூழ்நிலையில், உட்தணிக்கை அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் தனது பெயரையும் சேர்க்க வேண்டும் என்று கோரி கடந்த 10-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை உட்தணிக்கை அதிகாரியிடம் வேலுச்சாமி மனு கொடுத்தார். அதன் மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து பதவி உயர்வு பட்டியலில் தனது பெயரை சேர்க்கவும், 1-4-2012 முதல் ஆண்டு சம்பள உயர்வு வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலுச்சாமி மனுதாக்கல் செய்தார்.
நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்தால் அதைக் காரணம் காட்டி பதவி உயர்வை நிறுத்தி வைக்க முடியாது. வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார் என்ற தனிப்பட்ட புகார் மீதான விசாரணை நிலுவை யில் இருப்பதைச் சுட்டிக் காட்டியும் அவரது பதவி உயர்வை நிறுத்த முடியாது. பணியிடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மனுதாரர் பணியில் சேர்ந்துவிட்டதால், இயல்பாகவே சம்பள உயர்வைப் பெற தகுதியுடையவராகிறார். எனவே, அவருக்கு ஆண்டு சம்பள உயர்வு தர முடியாது என்று கூறுவதற்கு காரணம் எதுவும் இல்லை. ஒருவர் வழக்கொன் றில் தண்டனை பெற்றிருந்தால் மட்டுமே அவரது சம்பள உயர்வை நிறுத்திவைக்க முடியும்.சம்பள உயர்வு பெற மனுதாரருக்கு உரிமை உண்டு. 8 வாரத்துக்குள் மனுதாரருக்கு ஆண்டு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்.
Saturday, December 27, 2014
Friday, December 26, 2014
DEPARTMENTAL EXAM RESULTS |
(For Employees Of TANGEDCO/TANTRANSCO only) |
Results of the Departmental test conducted during the November 2014 |
Departmental test for Accounts Officers |
Departmental test for Internal Audit Officers |
Departmental Account test for Sub-ordinate Officers |
Departmental test for Technical Officers |
Friday, December 19, 2014
இனி பயமில்லாமல் 'பேஸ்புக்' பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி
சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
'தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது. இதையடுத்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான மொபைல் போன் எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் போன்றவற்றில் ஒருவர் தெரிவிக்கும் கருத்து பதிவு செய்யும் விஷயங்கள் ஒரே நேரத்தில் பலரையும் சென்றடைகின்றன.
அத்தகைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏயின்படி கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
'இவ்வாறு கைது செய்யப்படுவது அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது' என சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு நேற்று முன்தினம் தன் கருத்தை பதிவு செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சமூக வலைதளங்களில் தகவல் தொடர்பு சாதனங்களில் தனிநபர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்துகளுக்கு அரசியல் எதிர்ப்பு விமர்சனங்கள் வந்தன என்பதற்காக அத்தகைய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதோ தண்டிப்பதோ கூடாது என்பது தான் அரசின் இப்போதைய எண்ணம்.
உதாரணமாக டுவிட்டர் வலைதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேருங்கள் என வலைதளங்களில் யாராவது பிரசாரம் செய்தால் அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66 ஏ படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையம் என்ற இந்த ஒரு ஊடகம் மட்டும் தான் தணிக்கை இல்லாத ஊடகமாக இருக்கிறது; அது தொடர வேண்டும்.
சில சமயங்களில் நாட்டின் நலன், பாதுகாப்பு போன்ற விவரங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்றக் கோரி வலைதள நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ளத் தான் செய்யும். அதை தவறு என கூற முடியாது. எல்லா நாடுகளிலும் அந்த நடைமுறை உள்ளது' என்று தெரிவித்தனர்.
வலைதள நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ''அரசியல் காரணங்களுக்காக கருத்து சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. சமூக வலைதளங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். கருத்து பதிவு செய்ததற்காக கைது போன்ற நடவடிக்கைகள் சர்வாதிகார நடவடிக்கைகள்'' என்றார்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவில் மாற்றம் முந்தைய மன்மோகன் சிங் அரசில் கொண்டு வரப்பட்டது. அதை மாற்ற வேண்டும் என இப்போதைய மோடி அரசு முனைந்துள்ளது.
இதற்கு பின்னணியில் பிரதமர் மோடி தான் உள்ளார் என்ற கருத்தும் தெரிய வந்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே மேற்கண்ட முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
Thursday, December 18, 2014
எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து ஒ௫ தாய் வயிற்று பிள்ளைகளாய் கேப்டன் என்ற ஒ௫ மந்திர சொல்லுக்கு கட்டு பட்டு கழகமே கோவில் கேப்டனே தெய்வம் என்று இ௫ந்து வ௫ம் கேப்டனின் சிங்கங்கள் அனைவரையும் கேப்டனின் தலைமையில் நாளை நடைபெற உள்ள மின்கட்டண உயர்வு கண்டன ஆர்பாட்டத்திற்க்கு TNEB தேமுதிக தொழிலாளர் சங்கத்தின் சார்பாக வ௫க வ௫க என அன்புடன் அழைக்கிறோம் :.........
எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து ஒ௫ தாய் வயிற்று பிள்ளைகளாய் கேப்டன் என்ற ஒ௫ மந்திர சொல்லுக்கு கட்டு பட்டு கழகமே கோவில் கேப்டனே தெய்வம் என்று இ௫ந்து வ௫ம் கேப்டனின் சிங்கங்கள் அனைவரையும் கேப்டனின் தலைமையில் நாளை நடைபெற உள்ள மின்கட்டண உயர்வு கண்டன ஆர்பாட்டத்திற்க்கு TNEB தேமுதிக தொழிலாளர் சங்கத்தின் சார்பாக வ௫க வ௫க என அன்புடன் அழைக்கிறோம் :.........
பதிவு செய்த நாள்
17டிச2014
21:15
தமிழ்நாடு மின் வாரியத்தில், கள உதவியாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, 'ஆபீசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி - ஓ.எஸ்.டி.,' என்ற பெயரில், மீண்டும், பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு, ஓய்வூதியம் தவிர்த்து, மாதம் ஒன்றுக்கு, 75 ஆயிரம் ரூபாய் சம்பளம், கார், 'ஏசி' அறை, இரண்டு உதவியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால், மின் வாரியத்திற்கு, ஆண்டுதோறும், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல், இழப்பு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது: மின் வாரியத்தில், கள பிரிவில், 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓய்வு பெற்ற, 30 அதிகாரிகளுக்கு, மாதம், 75 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன், மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு, 75 ஆயிரம் ரூபாய், சம்பளம் வழங்குவதற்கு பதில், கள பிரிவில், ஒருவருக்கு (தற்காலிகம்), தலா, 7,500 ரூபாய் சம்பளத்தில், 10 ஊழியர்களை நியமிக்கலாம். எனவே, வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சாய்குமார், ஓய்வு பெற்றவர்களுக்கு, வழங்கப்பட்ட பதவிகளை ரத்து செய்வதுடன், அவ்வாறு, நியமிக்கப்படுவதற்கு, தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Wednesday, December 17, 2014
மின் கட்டண உயர்வை எதிர்த்த வழக்கின் கதி என்ன: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை
சென்னை: மின் கட்டண உயர்வுக்கு தடை கோரிய மனுவை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற மனு தாக்கல் செய்ய உள்ளதாக, தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மின் கட்டணம் தொடர்பான வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக, அக் ஷயகுமார், உறுப்பினராக ராஜகோபால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ரசூல், மனுத் தாக்கல் செய்தார். ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரி, சென்னை பார் அசோசியேஷன் தலைவர் தமிழ்மணி, மனுத் தாக்கல் செய்தார்.மின் கட்டண உயர்வுக்கு தடை கோரி, மூத்த வழக்கறிஞர் காந்தி, தாக்கல் செய்த மனுவில், 'மின் கட்டணத்தை உயர்த்த, முடிவு செய்யப்பட்டுள்ளது; ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள், மின் கட்டணம் தொடர்பாக முடிவு எடுக்க முடியாது' என, கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று மனுக்களும், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரரான, மூத்த வழக்கறிஞர் காந்தி, மற்றொரு மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினர். அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் அப்துல் சலீம் ஆஜரானார்.
மனுக்களை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் நியமனம் தொடர்பான, இரண்டு மனுக்களையும், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (நேற்று) விசாரணைக்கு வந்துள்ளது.அந்த மனுவுக்கு பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் கட்டணம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் இருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மனு நிலுவையில் இல்லாததால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, மூத்த வழக்கறிஞர் கோரினார். ஏற்கனவே, இரண்டு வழக்குகளில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலும், அரசு வழக்கறிஞரின் கருத்தின் அடிப்படையிலும், இந்த வழக்கை நாங்கள் பரிசீலிப்பது முறையாக இருக்காது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மின் கட்டண உயர்வுக்கு தடை கோரிய மனுவை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற மனு தாக்கல் செய்ய உள்ளதாக, தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மின் கட்டணம் தொடர்பான வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக, அக் ஷயகுமார், உறுப்பினராக ராஜகோபால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ரசூல், மனுத் தாக்கல் செய்தார். ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரி, சென்னை பார் அசோசியேஷன் தலைவர் தமிழ்மணி, மனுத் தாக்கல் செய்தார்.மின் கட்டண உயர்வுக்கு தடை கோரி, மூத்த வழக்கறிஞர் காந்தி, தாக்கல் செய்த மனுவில், 'மின் கட்டணத்தை உயர்த்த, முடிவு செய்யப்பட்டுள்ளது; ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள், மின் கட்டணம் தொடர்பாக முடிவு எடுக்க முடியாது' என, கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று மனுக்களும், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரரான, மூத்த வழக்கறிஞர் காந்தி, மற்றொரு மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினர். அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் அப்துல் சலீம் ஆஜரானார்.
மனுக்களை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் நியமனம் தொடர்பான, இரண்டு மனுக்களையும், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (நேற்று) விசாரணைக்கு வந்துள்ளது.அந்த மனுவுக்கு பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் கட்டணம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் இருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மனு நிலுவையில் இல்லாததால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, மூத்த வழக்கறிஞர் கோரினார். ஏற்கனவே, இரண்டு வழக்குகளில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலும், அரசு வழக்கறிஞரின் கருத்தின் அடிப்படையிலும், இந்த வழக்கை நாங்கள் பரிசீலிப்பது முறையாக இருக்காது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
Monday, December 15, 2014
கட்டண உயர்வுக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டனம்
கரூர், டிச. 14-தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டல கூட்டம் வலியுறுத்தியுள்ளது.கரூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு கரூர்மாவட்டத் தலைவர் சி.முருகேசன் சிறப்புரையாற் றினார். சங்கத்தின் கரூர் கோட்டத் தலைவர் பி.ராமகிருஷ்ணன், கரூர் கிராமிய கோட்டச்செயலாளர் குமார், குளித்தலை கோட்டச் செயலாளர் செல்வம் திருச்சி, பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை,
அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டநிர்வாகிகள் கலந்துகொண்ட னர். சங்கத்தின் கரூர் வட்டத்தலைவர் கே.தனபால் நன்றி கூறினார்.தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திருச்சி மண்டல பொறியாளர் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மீது கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும். கரூர், பெரம்பலூர் வட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்க ளுக்கு சங்க அலுவலகம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார்.
Pudukottai Electricity Distribution Circle – Review of Workload as per revised Workload norms as on 01.01.2014 in respect of RWE posts in O&M Distribution Sections (Field Workmen), Revenue Accounting posts, Assessment-cum-Collection posts, Stores Staff, Lines, Sub-Stations, Special Maintenance, MRT, etc. – Creation and abolition
TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
(ABSTRACT)
Establishment – Pudukottai Electricity Distribution Circle – Review of Workload as per revised Workload norms as on 01.01.2014 in respect of RWE posts in O&M Distribution Sections (Field Workmen), Revenue Accounting posts, Assessment-cum-Collection posts, Stores Staff, Lines, Sub-Stations, Special Maintenance, MRT, etc. – Creation and abolition of posts – Orders issued.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
(Administrative Branch)
(Per.) CMD TANGEDCO Proceedings No.188 Dated 10.12.2014.
Karthigai-24, Sri Jaya Aandu.
Thiruvalluvar Aandu 2045.
READ:
1) (Per.) B.P. (Ch.) No.45, (Adm. Branch),
dated 31.05.2010.
2) (Per.) FB TANGEDCO Proceedings No.2,
(Sectt. Branch), dated 11.01.2014.
3) CE/Per. Memo. (Per.) No.000708/11/G.39/
G.393/2014-2, dated 27.03.2014.
4) SE/ Pudukottai EDC Letter No.00916/57/ Adm.II/
A1/F.W.Load/14-2, dated 08.04.2014.
5) SE/ Pudukottai EDC Letter No.13084/575/
Adm.II/A1/F.Doc./2013-3, dated 10.04.2014.
6) SE/ Pudukottai EDC Letter No.00916/57/ Adm.II/
A1/F.W.Load/14-3, dated 21.04.2014.
7) (Per.) CMD TANGEDCO Proceedings No.117,
(Adm. Branch), dated 08.08.2014.
--------
PROCEEDINGS:
-------------------
As per the orders issued in the reference 2nd cited, proposals have been received from the Superintending Engineer/ Pudukottai Electricity Distribution Circle for the revised Workload norms based on Transformers/ Services as on 01.01.2014.
2) After careful consideration of the proposal of the Superintending Engineer/ Pudukottai Electricity Distribution Circle, sanction is hereby accorded for the creation/ abolition of the following posts in various cadres as detailed in the Annexures for a period of one year from the date of
---2
:: 2 ::
utilisation, due to revised workload norms in respect of RWE posts in O&M Distribution Sections (Field Workmen), Revenue Accounting posts, Assessment-cum-Collection posts, Stores staff, Lines, Sub-Stations, Special Maintenance, MRT, etc., based on the Services/ Transformers as on 01.01.2014:-
Creation
|
Abolition
| ||
AE/ JE/ Electrical I Grade
|
1
|
Accounts Supervisor
|
1
|
Revenue Supervisor
|
1
|
Typist
|
4
|
Inspector of Assessment
|
7
|
Record Clerk
|
4
|
Assessor
|
4
|
Office Helper
|
4
|
Stores Supervisor
|
1
|
Commercial Assistant
|
4
|
Office Helper/ Record Clerk
|
4
|
Line Inspector
|
4
|
Foreman I Grade
|
2
|
Field Assistant/ Wireman
|
122
|
Line Inspector
|
17
|
Foreman II Grade
|
8
|
Commercial Inspector
|
2
|
Field Assistant
|
9
|
Commercial Assistant
|
2
|
Driver
|
1
|
Technical Assistant
|
2
| ||
Wireman
|
59
| ||
Field Assistant/ Mazdoor
|
137
| ||
Comml. Ins./ Comml. Asst.
|
4
| ||
Field Assistant/ Wireman
|
2
| ||
Field Assistant
|
16
| ||
Watchman
|
3
| ||
Total
|
264
|
Total
|
161
|
3) The incumbent of the posts sanctioned in para (2) above will be eligible to draw the Usual Pay, Dearness Allowance, House Rent Allowance and other allowances as the case may be at the rates as admissible under the orders in force wherever applicable.
4) Consequent on the present Revision of Work Allocation of Staff Pattern, there shall not be any retrenchment/ reversion as per the orders in para (3) (ii) and (iii) in the B.P. 2nd cited.
5) The Superintending Engineer/ Pudukottai Electricity Distribution Circle shall report the actual date of utilisation/ abolition of posts as ordered in para (2) above promptly.
---3
:: 3 ::
6) The expenditure is debitable to “Tamil Nadu Electricity Board Funds – Revenue Expenses – Pudukottai Electricity Distribution Circle – 75 – Employees Cost”.
7) The receipt of the Proceedings shall be acknowledged.
(By Order of the Chairman-cum-Managing Director/ TANGEDCO)
Encl.: Annexures I to V.
N. KRISHNAMOORTHI
CHIEF ENGINEER/ PERSONNEL.
To
The Superintending Engineer/Pudukottai Electricity Distribution Circle (2 copies)
The Chief Engineer (Distribution)/ Trichy Region.
The Chief Internal Audit Officer/ Audit Branch/ Chennai-2.
Copy to:
The Secretary/ TANGEDCO/ Chennai-2.
The Chief Financial Controllers/ General & Revenue/ Accts. Branch/Chennai.
All Deputy Secretaries/ Board Office Sectt. Branch/ Chennai-2.
The Under Secretary/ Wage Revision/ Sectt. Branch/ Chennai-2.
The Deputy Chief Engineer/ Adm. Branch/ Chennai-2.
The Senior Personnel Officer/ Recruitment/ Adm. Branch/ Chennai-2.
The Senior Personnel Officer/ Labour/ Adm. Branch/ Chennai-2.
The Senior Personnel Officer/ Inspection/ Adm. Branch/ Chennai-2.
The Personnel Officer/ Staff Sanction/ Adm. Branch/ Chennai-2.
The Personnel Officer/ Panel/ Adm. Branch/ Chennai-2.
The Personnel Officer/ Implementation/ Adm. Branch/ Chennai-2.
The Assistant Personnel Officer/ Electrical/ Adm. Branch/ Chennai-2.
The Assistant Personnel Officer/ Collection Staff/ Adm. Branch/ Chennai-2.
The Assistant Personnel Officer/ Accounts Staff/ Adm. Branch/ Chennai-2.
The Assistant Personnel Officer/ Adm.&Accts. Staff/ Adm. Branch/ Chennai-2.
The Assistant Personnel Officer/ Adm. Staff/ Adm. Branch/ Chennai-2.
The Assistant Personnel Officer/ Estt. (Non-Tech.)/ Adm. Branch/ Chennai-2.
The Assistant Personnel Officer/ Tamil Development/ Adm. Branch/ Chennai-2.
for publication in the TNEB Bulletin. (2 copies).
---4
:: 4 ::
The Tamil Nadu Electricity Workers Federation.
The Tamil Nadu Electricity Board Accounts and Executive Staff Union.
The Tamil Nadu Electricity Board Workers Progressive Union (LPF).
The Central Organisation of Tamil Nadu Electricity Employees (COTEE).
The Minsara Pirivu Anna Thozhir Sangam.
The Tamil Nadu Minvariya Janatha Thozhilalar Sangam.
The Tamil Nadu National Electricity Workers Federation (2 Groups).
The Tamil Nadu Electricity Board Engineers’ Sangam.
The Tamil Nadu Electricity Board Employees Congress.
The Tamil Nadu Electricity Board Thozhilalar Aykkiya Sangam.
The Tamil Nadu Electricity Board Engineer’s Association.
The Tamil Nadu Electricity Board Finance and Accounts Officers Association.
The Bharathiya Electricity Employees Federation.
The Tamil Nadu Electricity Board Card Billing Staff Union.
The Tamil Nadu Electricity Board Dr. Ambedkar Employees Union.
All other Signatory Unions.
A.3 Section/ Board Office Sectt. Branch/ Chennai-2.
G.24 Section/ Adm. Branch/ Chennai-2. (2 copies)
G.3, G.12, G.13, G.25, G.26, G.27, G.34, G.42, G.43 & G.59 Sections/
Adm. Branch/ Chennai-2.
G.36, G.37 & G.38 Sections/ Adm. Branch/ Chennai-2. (each 2 copies).
G.393 Seat/ Adm. Branch/ Chennai-2.
Main Stock File/ Stock File.
:TRUE COPY: :FORWARDED BY ORDER:
SUPERINTENDENT.
Subscribe to:
Posts (Atom)
