Monday, December 15, 2014


கட்டண உயர்வுக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டனம்


கரூர், டிச. 14-தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டல கூட்டம் வலியுறுத்தியுள்ளது.கரூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு கரூர்மாவட்டத் தலைவர் சி.முருகேசன் சிறப்புரையாற் றினார். சங்கத்தின் கரூர் கோட்டத் தலைவர் பி.ராமகிருஷ்ணன், கரூர் கிராமிய கோட்டச்செயலாளர் குமார், குளித்தலை கோட்டச் செயலாளர் செல்வம் திருச்சி, பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை,

அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டநிர்வாகிகள் கலந்துகொண்ட னர். சங்கத்தின் கரூர் வட்டத்தலைவர் கே.தனபால் நன்றி கூறினார்.தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திருச்சி மண்டல பொறியாளர் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மீது கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும். கரூர், பெரம்பலூர் வட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்க ளுக்கு சங்க அலுவலகம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

No comments: