Thursday, February 19, 2015
வி.ஏ.ஓ.க்களுக்கு பதவி உயர்வில் மாற்றம்: அரசு புதிய உத்தரவு
சென்னை, பிப். 19–தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) வருவாய் ஆய்வாளராக (ஆர்.ஐ.) பதவி உயர்வு பெறுவதில் கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. பதவி உயர்வுக்கு 10 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. மேலும் பதவி உயர்வு பெற வேண்டுமானால் வி.ஏ.ஓ.வாக 10 ஆண்டுகள் பணி செய்து இருக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.இதனால் வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வு பெறுவதில் காலதாமதமும் பலருக்கு வாய்ப்பும் கிடைக்காமல் போய் விடுவதாக வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு முதல்–அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. பதவி உயர்வு சதவிகிதத்தை கூட்டவும், பதவி உயர்வுக்கான பணிக் காலத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இதனை ஏற்று முதல்–அமைச்சர் கடந்த பட்ஜெட்டில் வி.ஏ.ஓ. பதவி உயர்வில் மாற்றம் அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 16–ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன் பிறப்பித்துள்ள அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–கிராம நிர்வாக பணியாளர்கள் பதவி உயர்வு சதவீதம் 10–ல் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று இருந்த முறை இனி 6 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.வி.ஏ.ஓ. பதவி உயர்வில் மாற்றம் குறித்த அரசாணை வெளியிட்டதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் நலச்சங்க தலைவர் ரவி ரெங்கராஜன், மாநில பொதுச் செயலாளர் பாக்கியநாதன், மாநில இணைப் பொதுச் செயலாளர் கு.வாசுதேவன், சங்க புரவலர் இரா.போசு ஆகியோர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஜெயலலிதாவுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment