Thursday, February 20, 2014

மேட்டூர் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் விஜயகாந்துக்கு நன்றி

தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க நிர்வாகம் மறுத்து வந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் ஆலோசனையின் பேரில், தொழிலாளர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டி தமிழ்நாடு மின்சார வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்க துணைத்தலைவர் நா.செந்தில்குமார், தொழிலாளர் துறை அலுவலரிடம் கோரிக்கை எழுப்பி, தொடர்ந்து போராடியதன் விளைவாக, அங்கு பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வார விடுமுறை முறையாக வழங்க மேட்டூர் அனல் மின் நிலையம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஒத்துக்கொண்டுள்ளது. தங்களுக்கு வார விடுமுறை அளிக்க தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மேற்கொண்ட முயற்சிக்கு மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சியோடு கூடிய நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: